என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பயங்கரவாதிகள் கொலை
நீங்கள் தேடியது "பயங்கரவாதிகள் கொலை"
இலங்கையில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வீட்டில் குண்டு வெடித்ததில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். #SriLankaAttacks #ISIS
கொழும்பு:
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், கல்முனை சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு தீவிரமாக சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அந்த வீட்டை அதிரடிப் படை வீரர்கள் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் உள்ளே இருந்துகொண்டு துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த மோதல் காரணமாக கல்முனை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #SriLankaAttacks #ISIS
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலின்போது ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #SriLankaAttacks #ISIS
கொழும்பு:
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து ஐஎஸ் கொடிகள், தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் அவர்களின் பிரசார சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தை ரெயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaAttacks #ISIS
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஐஎஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அவர்களிடம் இருந்து ஐஎஸ் கொடிகள், தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் அவர்களின் பிரசார சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் ஒருவர் பலியானதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தை ரெயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaAttacks #ISIS
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் மட்டும் ஓராண்டு காலத்தில் 3,771 பயங்கரவாதிகளை கொன்று குவித்தாக அந்நாட்டின் சிறப்பு படையினர் இன்று தெரிவித்தனர். #MilitantsKilled #NorthAfganistanMilitants
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் ராணுவம் மற்றும் போலீசாருக்கு அதிபர் அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
அவ்வகையில், வடக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தானுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற தேடுதல் வேட்டை மற்றும் மோதல்களில் 3,7,71 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ‘209 ஷஹீன்’ படையை சேர்ந்த துணை தளபதி ஆதம் கான் மட்டின் இன்று தெரிவித்துள்ளார்.
‘வாலித் 97’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மொத்தம் 88 மோதல்களில் கொல்லப்பட்ட 3,771 பயங்கரவாதிகள் 64 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ராணுவத்தின் தரப்பிலும் அதிகம் பேர் உயிரழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. எனினும், தங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவோம் என்று பெரும்பான்மையான ராணுவ வீரர்கள் சபதமேற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் பகுதியில் ‘வாலித் 40’ என்ற பெயரிலும், குன்டுஸ் பகுதியில் ‘தூஃபான் 25’ என்ற பெயரிலும், பாக்லான் பகுதியில் ‘ஷஹின் 1’ என்ற பெயரிலும் தொடர்ந்து ராணுவத்தின் சிறப்பு படைகளின் பயங்கரவாத ஒழிப்பு வேட்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #MilitantsKilled #NorthAfganistanMilitants

ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Afghansf #Talibanmilitants
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரமாக நன்கர்ஹர், ஃபர்யாப், மேற்கு ஃபரா ஆகிய மூன்று மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட பகுதிகளில் இருந்து தலிபான்கள் வைத்திருந்த ராக்கெட் ஏவுகணைகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. #Afghansf #Talibanmilitants
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர். #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் ராணுவ வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 69 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 20 பயங்கரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டனர் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுத கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இந்த தாக்குதல் அழிக்கப்பட்டன என அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Afghanmilitants #Afghanairstrikes #69Talibanskilled

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். #JammuKashmir #Encounter
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் ஜாகூ பகுதியில் உள்ள கான்சாகீப் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். #JammuKashmir #Encounter

இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கரதுப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.
என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏ.கே.ரக துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். #JammuKashmir #Encounter
×

X